ரயில் பயணிகள் கவனத்திற்கு..............................
அன்று மாலை 6 மணி சென்னை டு காட்பாடி செல்லும்
பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது அன்று அந்த ரயிலில் இருந்த அனைவரும் காட்பாடி
செல்பவர்கள் . வழியில் இருந்த 4 ரயில் நிலையங்களிலும் பயணிகள் இல்லை என தெரிந்தது
. ரயில் ஓட்டுனர் தென்னவன் ரயில்வே மேலாளரிடம் தொடர்பு கொண்டு இன்று பயணிகள் அனைவரும்
காட்பாடி செல்ல டிக்கட் எடுத்துள்ளனர். மற்ற ஸ்டேசன் மாஸ்டர்கள் எல்லாம் பயணிகள் இல்லை
என கூறிவிட்டதால் நிறுத்தாமல் செல்லட்டுமா என கேட்டான் . ஸ்டேசன் மாஸ்டரும் சரி என
கூறிவிட்டார்.
இதை
ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி வியாபாரிகள் உடனே ஒரு வேலை செய்தார்கள் . 4 ஸ்டேசனுக்கும்
போன் செய்து ஒவ்வோர் ஸ்டேசனுக்கும் 50 மேற்பட்ட பயணிகள் வருவதாக போன் செய்து .. அப்படியே
ரயில்வே மேலாளருக்கும் 20க்கும் மேற்பட்ட போன் செய்து பயணிகள் வருவதாக கூறிவிட்டனர்.
தென்னவன்
ரயிலை இயக்கி சிறிது தொலைவு வந்த உடன் ரயில்வே மேலாளரிடம் இருந்து போன் 4 ரயில்வே ஸ்டேசனிலும்
பயணிகள் காத்திருப்பதாகவும் . இனிமேல் இப்படி நீ பொய் சொல்லாதே எனவும் கூறி கண்டித்தார்.
ரயில்
4 ரயில் நிலையங்களிலும் 10 நிமிடம் நின்றது பயணிகள் ஏறவில்லை பஜ்ஜி வியாபாரிகள் தான்
ஏறி வியாபாரம் செய்தனர். மொத்த பயணிகளுக்கும் 40 நிமிட தாமதம்தான் மிச்சம். தென்னவனுக்கு
வருத்தபடுவதா கோபப்படுவதா என தெரியவில்லை.
அடுத்தநாள் ரயில் பயணிகள் கவனிக்கவும் என
ஒலிகேட்டவுடன் ரயில்வே மேலாளர் தென்னவனைப்
பார்த்து சிரித்தார் அந்த மௌனசிரிப்பில் எத்தனை அர்த்தங்கள்
நியதி – பொய்சொல்லி பெறும் பலன் பாவத்திற்கு
சமம்

Comments
Post a Comment