- ஒருவன் நல்லது செய்தால் அதை தடுக்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அதுவே உலக இயல்பு
ஆசிரமத்தில் குரு அனைவரையும் அழைத்தார்
அனைவருக்கும் பழம் ஒன்றைக் கொடுத்து இரு
மருத்துவ சக்தி உடையது அனைவரும் சாப்பிடுங்கள் என கூறினார் . அனைவரும் அதை சாப்பிட்டு
கொட்டைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர் தென்னவன் மட்டும் கொட்டைகளை கையில் வைத்துக்
கொண்டான். குரு அதை கண்டும் கானாது போல் இருந்தார்.
தென்னவன் அருகே உள்ள மேட்டுப்பகுதிக்கு சென்றான்
அங்கு அவனிடம் இருந்த 4 கொட்டைகளையும் விதைத்தான். அப்போது ஒரு கிளி வந்து நான் அந்த
கொட்டைகளை சாப்பிடவா என கேட்டது. அதற்கு அவன் சொன்னான் வேண்டாம் இது மரமாகி பழம் தரும்
அப்போது சாப்பிடலாம் என்றான்.
தினமும் காலை யாருக்கும் தெரியாமல் அங்கு
தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றினான் . ஒருநாள் வேறோர்சீடன் அதைபார்த்து அவனுக்கு தெரியாமல்
சென்று பார்த்தான். என்னவென்று அறிந்து கொண்டான். இவன் மட்டும் நல்லது செய்தால் குருவிடம்
நல்லபேர் வாங்கிவிடுவானே என்று மற்றவர்களிடம் கூட்டு சேர்ந்து சதிசெய்தான்
தென்னவன் விதைத்த விதைகளை எடுத்துவிட்டு
உதவாத விதைகளை அந்த இடத்தில் நட்டு வைத்தார்கள் . தென்னவனும் இது தெரியாமல் ஒரு வருடம்
வரை தண்ணீர் கொண்டு சென்று ஊற்றினான். ஒரு நாள் குரு கேட்டார் என்ன தினமும் தண்ணீர்
கொண்டு செல்கிறாய் என கேட்டதற்கு உண்மையை கூறினான்.
மரம் பழம் விடத் தொடங்கியது தென்னவன் பழங்களை
கொண்டுவந்து குருவிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் சொன்னான். குரு எல்லாவற்றினையும்
அறிந்தவர் அல்லவா. அடுத்தநாள் எல்லோருக்கும் கொடுத்தார். அனைவரும் ரசித்து உண்டனர்.
எதிரிகளுக்கு ஆச்சர்யம் எப்படி பழம் இனிக்கிறது என. ஆனால் தென்னவனுக்கு மட்டும் அவன்
எடுத்து வந்த பழத்தை கொடுத்தார். அவனுக்கு கசந்தது உடனே அவன் குருவே என்னை மன்னிக்கவும்
இப்படி ஒரு பழதை கொடுத்ததற்கு என்றான்.
குரு அனைவரையும் அழைத்து கூறினார் ஒருவன்
நல்லது செய்தால் அதை தடுக்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அதுவே உலக இயல்பு என்றார்.
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தது ஆனால்.
பழம் எப்படி வந்தது என குழம்பினர் அதற்கு தலைமை சீடன் அளித்தார் . தென்னவன் விதைகள்
அழிக்கப்பட்டதை அறிந்த குரு வேறுஒரு இடத்தில் அதேமரங்களை நட்டு இவன் போலவே நீர் ஊற்றி
வாந்தார் . அதன் கனிகள் தான் இரு என்று தலைமை சீடன் கூறினான்.
நியதி
- ஒருவன் நல்லது செய்தால் அதை தடுக்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அதுவே
உலக இயல்பு என்றார்.

Comments
Post a Comment